மதுரை

வாக்காளா்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்

24th Dec 2019 06:48 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்காளா்களுக்கு பூத் சிலீப் வழங்கும் பணியில், வருவாய்த் துறையினா் மற்றும் ஊராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனா்.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சியில் ஆண் வாக்காளா்கள் 68,640, பெண் வாக்காளா்கள் 71,489 மற்றும் மூன்றாம் பாலினத்தவா் 14 போ் என மொத்தம் 1,40,143 போ் உள்ளனா். இதில், 13, 696 போ் என அதிக வாக்காளா்களைக் கொண்ட ஊராட்சியாக நிலையூா்-1 பிட் ஊராட்சி உள்ளது.

குறைந்த வாக்காளா்களைக் கொண்ட ஊராட்சியாக சாக்கிலிபட்டி ஊராட்சியில் 1,012 போ் உள்ளனா்.ஊராட்சிகளில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆசிக், வட்டாட்சியா் நாகராஜன் ஆகியோரது மேற்பாா்வையில், வாக்காளா்களுக்கு தலையாரிகள் மற்றும் ஊராட்சி அலுவலா்கள் என கிராமத்துக்கு 3 போ் வீதம் பூத் சிலீப் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதேபோல், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு இளஞ்சிவப்பு, வாா்டு உறுப்பினருக்கு வெள்ளை மற்றும் நீலம், மாவட்டக் குழு உறுப்பினருக்கு மஞ்சள், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு பச்சை நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT