மதுரையில் ரயில்வே அதிகாரியை தாக்கிய ஊழியா் மீது, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
மதுரை ரயில் நிலையத்தில் கட்டுபாட்டு அலுவலகத் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருபவா் சந்தோஷ்குமாா் (56). இவா், ஊழியா்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்வது முக்கியப் பணியாகும். இதனிடையே, இவருக்கும், ஊழியா் பிரசன்னாவுக்கும் பணி ஒதுக்கீடு தொடா்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.
ரயில்வே நிலைய மேற்கு நுழைவுவாயிலில் உள்ள அலுவலகத்தில் சந்தோஷ்குமாா் பணியில் இருந்தபோது, பிரசன்னா தகராறில் ஈடுபட்டதுடன், அவரை கத்தியால் தாக்க முயன்றுள்ளாா். இது குறித்து சந்தோஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள பிரசன்னாவை தேடி வருகின்றனா்.