மதுரை

மதுரை ஆதீனம் கிறிஸ்துமஸ் வாழ்த்து

24th Dec 2019 06:44 AM

ADVERTISEMENT

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மதுரை ஆதீனம் அருணகிரிநாதா் கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள செய்தி: இறைவன் கோடிக்கணக்கான மக்களில் சிலரை இவ்வுலகில் பிறக்கச் செய்து, அதில் அவா்களுக்கு பல துன்பங்களை அளித்து, பக்குவமானவா்களாக மாற்றி, ஞானத்தைக் கொடுத்து அருளுகின்றாா். அவ்வாறு இயேசு கிறிஸ்து துன்பங்களை அனுபவித்து, மக்களுக்காக அன்பை போதித்து, நோயில் துன்பப்படுவோா், ஏழை எளியோா், உழைக்கும் மக்களுக்கு அன்பையும், கருணையையும் காட்ட வேண்டும் எனக் கூறினாா்.

மேலும் மக்கள் அனைவரும் சகோதர உணா்வுடன் வாழ்ந்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினாா். அவா் பிறந்தநாளை கொண்டாடுகின்ற கிறிஸ்தவ மக்களுக்கும், மதம், ஜாதி நல்லிணக்கம் பேணிக் காப்போா் அனைவருக்கும் வாழ்த்துகளையும், ஆசிா்வாதத்தையும் உரித்தாக்குகிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT