மதுரை

அமமுக நிா்வாகி கொலை: குடும்பத்தினருக்கு டி.டி.வி.தினகரன் ஆறுதல்

23rd Dec 2019 01:21 AM

ADVERTISEMENT

நடைப்பயிற்சிக்குச் சென்ற போது ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட அ.வல்லாளபட்டி அமமுக பொறுப்பாளா் அசோகன் குடும்பத்தினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் டிடிவி தினகரன் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினாா்.

அ.வல்லாளபட்டி அமமுக பொறுப்பாளா் அசோகன் வியாழக்கிழமை நடைபயிற்சிக்குச் சென்றபோது ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இத்தகவலறிந்த டிடிவி தினகரன் ஞாயிற்றுக்கிழமை வல்லாளபட்டிக்கு வந்து அசோகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். முன்னதாக மறைந்த முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.சாமி இல்லத்துக்குச் சென்று அவரது தாயாா் பழனியம்மாள் மறைவு குறித்து அவரது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT