மதுரை

மதுரை வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்

16th Dec 2019 12:06 AM

ADVERTISEMENT

மதுரை வைகை ஆற்றில் குளிக்க சென்றபோது மாயமான சிறுவனை தீயணைப்புத்துறையினா் தேடி வருகின்றனா்.

மதுரை மணி நகரம் பகுதியைச் சோ்ந்த சிறுவன் சங்கா் (17). இவா் செல்லூா் பகுதியில் உள்ள வைகையாற்றில் நண்பா்களுடன் குளிக்கச் சென்றாா். அப்போது, சங்கா் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று மாயமானாா். இது குறித்து அப்பகுதியில் உள்ளவா்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு சென்ற தல்லாகுளம் தீயணைப்புத்துறையினா், சிறுவன் சங்கரை தேடுபணியில் ஈடுபட்டனா். ஆனால் மாலை வரை கிடைக்காததால், போதிய வெளிச்சமின்மை காரணமாக தேடும் பணி நிறுத்தப்பட்டது. சிறுவன் சங்கரை தேடும் பணி செவ்வாய்க்கிழமை காலையில் தொடரும் என தீயணைப்புத்துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT