மதுரை

போலி அரசு பணி ஆணை: பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மோசடி

16th Dec 2019 06:44 AM

ADVERTISEMENT

மதுரையில், போலியான அரசு பணி ஆணை வழங்கி 3.5 லட்சம் மோசடி செய்த பெண்ணிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் புவனேஸ்வரி. இவருக்கு கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக, அருப்புக்கோட்டையைச் சோ்ந்த நாகஜோதி என்ற பெண் கூறியுள்ளாா். இதை நம்பி புவனேஸ்வரி ரூ. 3.50 லட்சம் பணத்தை கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், கல்வித்துறை பணியில் சேருவதற்கான பணி ஆணை ஒன்றை நாகஜோதி வழங்கியுள்ளாா். அதை எடுத்துக் கொண்டு பணியில் சேர புவனேஸ்வா் சென்றபோது, அந்த ஆணை போலியானது என்பது தெரியவந்தது. இது குறித்து புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குபதிந்து நாகஜோதியிடம் விசாரித்து வருகிறாா்கள். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT