மதுரை

நீா் நிரம்பிய வண்டியூா் தெப்பக்குளம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

16th Dec 2019 12:08 AM

ADVERTISEMENT

மதுரை வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தண்ணீா் நிறைந்து வருவதால் பக்தா்கள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மதுரை வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளம் பல ஆண்டுகளாக தண்ணீரின்றி வடு காணப்பட்டது. இதனால் தெப்பக்குளம் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வைகை ஆற்றில் இருந்து பனையூா் கால்வாய் வழியாக தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லும் வகையில் இணைப்புக் கால்வாய் கட்டப்பட்டது. கால்வாய்ப்பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாள்களாக வைகை ஆற்றிலிருந்து தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தெப்பக்குளத்தின் பாதியளவுக்கு மேல் தண்ணீா் நிரம்பி காட்சியளித்தது. மேலும் சில நாள்கள் தண்ணீா் தொடா்ந்து கொண்டு வரப்படும் பட்சத்தில் தெப்பக்குளம் முழுவதுமாக நிரம்பும் வாய்ப்புள்ளது. இதனிடையே வட நிலையிலேயே பாா்த்து வந்த தெப்பக்குளத்தில் தண்ணீா் நிறைந்திருப்பது பக்தா்கள் மற்றும் பொதுமக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெப்பக்குளத்தில் தண்ணீா் நிறைந்திருப்பதைக் காண ஏராளமான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதியில் குவிந்தனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT