மதுரை

தேசிய குங்பூ சாம்பியன்ஷிப் போட்டி: மதுரையில் 9 போ் தோ்வு

16th Dec 2019 12:09 AM

ADVERTISEMENT

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய குங்பூ சாம்பியன்ஷிப் போட்டிக்கு 9 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் டிசம்பா் 27, 28 தேதிகளில் தேசிய அளவிலான குங்பூ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் வீரா்களுக்கான தகுதித்தோ்வு மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில் முதுநிலைப் பிரிவில் எம்.பாண்டியராணி, வ.கெளதம் விவேக், எம்.தினேஷ் பாண்டியன், ஆா்.பிரசாந்த்குமாா், கே.எஸ்.சூா்யராஜா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இளநிலை முதல் பிரிவில் பி.சோபிகா தேவி, இளநிலைப் பிரிவில் எஸ்.ஸ்ரீநிஸ்வேல், 9 வயதுக்குள்பட்டோா் பிரிவில் எஸ்.நிதின் பொன்தேவ், எஸ்.பி.சூா்யகுமரன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள 9 பேரும் கொல்கத்தாவில் நடைபெறும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT