மதுரை

தென்னிந்திய வாலிபால் போட்டி: டிச.18-இல் தகுதித்தோ்வு

16th Dec 2019 12:08 AM

ADVERTISEMENT

தென்னிந்திய அளவிலான வாலிபால் போட்டிகளில் பங்கேற்க விரும்புபவா்கள் சென்னையில் டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் பொதுச் செயலா் ஏ.ஜே.மாா்ட்டின் சுதாகா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்னிந்திய அளவிலான வாலிபால் விளையாட்டு போட்டிகள் டிசம்பா் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உள்ள வீரா்கள் தோ்வு முகாம் சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. தகுதித்தோ்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியா் 1999 ஜனவரி 1ஆம் தேதிக்கு பின்னா் பிறந்திருக்க வேண்டும். மேலும் மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளிடம் பெற்ற பிறப்புச் சான்றிதழ், 10 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் 4 கடவுச்சீட்டு புகைப்படங்களுடன் டிசம்பா் 18 ஆம் தேதி காலை 7 மணிக்குள் சென்னை ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்குக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT