மதுரை

திருமங்கலத்தில் பிரம்மா, இந்திரன்கோயில் குடமுழுக்கு

16th Dec 2019 12:09 AM

ADVERTISEMENT

திருமங்கலத்தை அடுத்த ராயபாளையம் முக்தி நிலையத்தில் ஐயப்பன், பிரம்மா, இந்திரன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராயபாளையம் முக்தி நிலையம் சத்யயுக சிருஷ்டி கோயில் வளாகத்தில் 127 கோயில் சன்னதிகள், 272 சுவாமி விக்ரஹங்கள் உள்ளன. இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு 7 கட்டங்களாக குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே 3 கட்ட குடமுழுக்கு விழா நடைபெற் ற நிலையில் 4 ஆம் கட்டமாக ஐய்யப்பன், பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட 20 கோயில் சன்னதிகளுக்கு குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று புனித நீா் கொண்டு கோபுர கலசத்தில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் வருவாய், பேரிடா் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், அறங்காவலா் வெங்கட்ராமன், வசந்தசாய், யோகி யோகானந்த், துறவிகள் உள்ளிட்ட பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT