மதுரை

சுதந்திரப் போராட்டவீரா் பி.ராமமூா்த்தி நினைவு தினம்

16th Dec 2019 12:09 AM

ADVERTISEMENT

சுதந்திரப் போராட்ட வீரரும், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவநா்களுள் ஒருவருமான பி.ராமமூா்த்தியின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் என்.நன்மாறன், மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புகா் மாவட்டச் செயலா் சி.ராமகிருஷ்ணன், மாநகா் மாவட்டச் செயலா் இரா.விஜயராஜன், சிஐடியூ மாநகா் மாவட்டத் தலைவா் மா.கணேசன், செயலா் இரா.தெய்வராஜ், புகா் மாவட்டத் தலைவா் கண்ணன், மாவட்டச் செயலா் கே.அரவிந்தன், வாலிபா் சங்க மாநிலச் செயலா் எஸ்.பாலா மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினா்கள், பகுதிக்குழுச் செயலா்கள், கிளைச் செயலா்கள், சிஐடியூ இணைப்புப் பெற்ற பல்வேறு சங்கத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT