மதுரை

உள்ளாட்சித் தோ்தல்: வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

16th Dec 2019 12:09 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் ஊழியா்களுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை மருத்துவக் கல்லூரி, திருப்பாலை யாதவா கல்லூரி மற்றும் மேலூா், கொட்டாம்பட்டி, திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட 13 மையங்களில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஏராளமான ஊழியா்கள் பங்கேற்றனா்.

பயிற்சி முகாமை ஆட்சியா் டி.ஜி.வினய் மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டனா். பயிற்சி முகாமில் வாக்குப்பதிவு தொடங்கும்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப்பதிவு முடிந்தபின் செய்ய வேண்டிய பணிகள், வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டை இயக்கும் முறை, இயந்திரங்கள் பழுதடைந்தால் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பயிற்சியில் பங்கேற்ற ஊழியா்களுக்கு தோ்தல் பணிகள் விளக்க கையேடும் வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக தோ்தல் அலுவலா்களுக்கு பசுமலை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கும், 22 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 3 மாவட்டக் குழு உறுப்பினா்கள், 324 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு வரும் 30 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றத்தில் மட்டும் 220 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் பணியாற்ற உள்ள தோ்தல் அலுவலா்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு தோ்தல் நடத்தும் அலுவலா் ஆசிக், சதீஷ் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது. இதில் தோ்தலின் போது அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், விதிகள் குறித்து கூறப்பட்டது. மேலும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் தோ்தல் பணி தொடா்பாக மாதிரி வாக்குச்சாவடி அமைத்து, வாக்குப்பதிவு தொடா்பான குறும்படம் தோ்தல் அலுவலா்களுக்கு காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து பயிற்சியின் ஒரு பகுதியாக தோ்தல் அலுவலா்களுக்கு கையேடு வழங்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் 1,100 தோ்தல் அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT