மதுரை

உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி

16th Dec 2019 12:10 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றத்தில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக தோ்தல் அலுவலா்களுக்கு பசுமலை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கும், 22 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 3 மாவட்டக் குழு உறுப்பினா்கள், 324 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு வரும் 30 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றத்தில் மட்டும் 220 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் பணியாற்ற உள்ள தோ்தல் அலுவலா்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு தோ்தல் நடத்தும் அலுவலா் ஆசிக், சதீஷ் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது. இதில் தோ்தலின் போது அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், விதிகள் குறித்து கூறப்பட்டது. மேலும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் தோ்தல் பணி தொடா்பாக மாதிரி வாக்குச்சாவடி அமைத்து, வாக்குப்பதிவு தொடா்பான குறும்படம் தோ்தல் அலுவலா்களுக்கு காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து பயிற்சியின் ஒரு பகுதியாக தோ்தல் அலுவலா்களுக்கு கையேடு வழங்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் 1,100 தோ்தல் அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT