மதுரை

மேலூா் அருகே மண் திருட்டு: ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் மீது வழக்கு

14th Dec 2019 08:31 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் மேலூா் அருகே அனுமதியின்றி மண் அள்ளியது தொடா்பாக ஊராட்சி முன்னாள் தலைவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மேலூா் அருகே அட்டப்பட்டி பகுதியில் அரசு நிலத்தில் அனுமதியின்றி ஜேசிபி மூலம் மண் அள்ளுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் கீழவளவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். அங்கு மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த ஆண்டிகோவில்பட்டியச் சோ்ந்த ஓட்டுநா்கள் தினேஷ், சுரேஷ் ஆகியோரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். அனுமதியின்றி மண் அள்ளியதாக அட்டப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவா் ராஜா மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT