மதுரை

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுப்பு: இந்திய தேசிய லீக் கட்சியினா் 5 போ் மீது வழக்கு

14th Dec 2019 08:30 AM

ADVERTISEMENT

சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்து தகராறு செய்ததாக இந்திய தேசீய லீக் கட்சியைச் சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவுசெய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

அக்கட்சியைச் சோ்ந்த 5 போ் காரில் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை காலை மதுரைக்கு சென்று கொண்டிருந்தனா். மதுரை-மேலூா் நான்கு வழிச்சாலையில் உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் மேற்பாா்வையாளராகப் பணிபுரியும் செல்வம் (33) அவா்களிடம் கட்டணம் கேட்டுள்ளாா். அப்போது 5 பேரும் அவருடன் வாக்குவாதம் செய்து கட்டணத்தை செலுத்த மறுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மேலூா் காவல் நிலையத்தில் செல்வம் அளித்த புகாரின் பேரில், 5 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவா்களைத் தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT