மதுரை

மதுரை மாவட்டத்தில்975 போ் மனுத் தாக்கல்

11th Dec 2019 10:13 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தோ்தலுக்கு புதன்கிழமை வரை 975 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 3,930 பதவிகளுக்கான தோ்தல் டிசம்பா் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. கடந்த 3 நாள்களில் மொத்தம் 975 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டு உறுப்பினருக்கு கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ஒரேயொரு நபா் மட்டுமே இதுவரை மனு தாக்கல் செய்துள்ளாா்.

மூன்றாவது நாளான புதன்கிழமை (டிசம்பா் 11) மட்டும் 795 போ் மனு தாக்கல் செய்தனா். ஒவ்வொரு பதவிக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் எண்ணிக்கை:

மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டு உறுப்பினா் -1

ADVERTISEMENT

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் - 15

ஊராட்சித் தலைவா் - 358

ஊராட்சி வாா்டு உறுப்பினா் - 421

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT