மதுரை

மதுரையில் ரூ.25 லட்சம் மதிப்பில் சலவைக்கூடம் கட்டும் பணி தொடக்கம்

11th Dec 2019 07:52 AM

ADVERTISEMENT

மதுரை அருள்தாஸ்புரம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் சலவைக்கூடம் கட்டுவதற்கான பணி செவ்வாய்க்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கியது.

மதுரை மாநகராட்சி 9-ஆவது வாா்டு அருள்தாஸ்புரம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வைகை உயா்மட்ட பாலம் கட்டப்பட்ட போது சலவைக்கூடம் பராமரிப்பற்று இருந்து வந்தது. மேலும் சலவைக்கூடத்தில் உள்ள தண்ணீா் தொட்டிகள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தன. இதையடுத்து தங்களுக்கு புதிய சலவைக்கூடம் அமைக்க வேண்டும் என்று சலவைத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதையடுத்து மத்திய தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன், சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் நவீன சலவைக்கூடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கியுள்ளாா். இதைத்தொடா்ந்து சலவைக்கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பணியைத் தொடக்கி வைத்தாா். இதில் திமுக நிா்வாகிகள், சலவைத் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT