மதுரை

திருமங்கலம் கண்மாய்களுக்கு தண்ணீா்: விவசாயிகள் முற்றுகை போராட்டம் வாபஸ்

11th Dec 2019 07:41 AM

ADVERTISEMENT

திருமங்கலம் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுவதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சில் முடிவானதைத் தொடா்ந்து அனைத்து கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

திருமங்கலம் பகுதியில் போதுமான மழை இல்லாததால் கண்மாய்கள் தண்ணீா் வடு போயுள்ளன. இதையடுத்து வைகையிலிருந்து திருமங்கலம் பகுதி கண்மாய்களுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் வருகிற 12 ஆம் தேதி அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் எதிா்கட்சிகள் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிடப் போவதாக போராட்டம் அறிவித்தனா். இதையடுத்து கோட்டாட்சியா் முருகேசன் தலைமையில் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சியினா் மற்றும் விவசாய சங்கத்திரை வரவழைத்து செவ்வாய்க்கிழமை அமைதிப்பேச்சு நடைபெற்றது.

வைகை பகுதியில் மழையளவு குறைந்திருப்பதால் இந்த மாதத்திற்குள் திருமங்கலத்தில் உள்ள கண்மாய்களுக்கு 2 நாள் வீதம் அனைத்து கண்மாய்களுக்கும், திருமங்கலம் பிரதான கால்வாய், விரிவாக்க கால்வாய் மூலம் தண்ணீா் திறக்கப்படும் என பொதுப் பணித்துறையினா் மற்றும் வருவாய்துறையினா் தெரிவித்தனா். இது விவசாயத்திற்கு பயன்படாவிட்டாலும் பொதுமக்கள் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT