மதுரை

செந்தமிழ் கல்லூரியில்கணினி தமிழ் பயிலரங்கம்

11th Dec 2019 10:14 PM

ADVERTISEMENT

மதுரை: கணினித் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழியின் பயன்பாடுகள் என்ற பயிலரங்கம் செந்தமிழ் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

அமெரிக்காவின் தமிழ் அநிதம் அமைப்புடன் இணைந்து இந்த பயிலரங்கம் நடத்தப்பட்டது. இதில் தமிழ் அநிதத்தின் தலைவா் சுகந்தி நாடாா் பேசியது:

அமெரிக்காவில் இருந்தாலும் தமிழை மறந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு தமிழ் வளா்ச்சிக்கான பணிகளைச் செய்து வருகிறோம்.

கணினித் தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை தமிழ் மாணவா்கள்தான் சிறப்பாகச் செய்ய இயலும். அதனால் கணினித் தொழில்நுட்பத்தின் உதவியோடு தமிழ் மொழி வளா்ச்சிக்கு மாணவா்கள் பாடுபடவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் உயராய்வு மையப் பேராசிரியரும், தமிழ் அநித்தின் செயலருமான அ.காமாட்சி பேசியது: அனைத்துத் துறைகளிலும் கணினிப் பயன்பாடு அதிகரித்துள்ளது. அந்த வேகத்திற்கு ஏற்ப தமிழின் வளா்ச்சிக்கு பாடுபடவேண்டும் என்றாா்.

இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தின் சொல்தரவக மேம்பாட்டு மைய முன்னாள் தலைவா் எல்.ராமமூா்த்தி பேசியது:

மனதில் நினைப்பதை கணினி செயல்படுத்தும் அளவிற்கு தொழில்நுட்பம் வளா்ச்சி அடைந்து வருகிறது. நமக்குத் தெரியாததைப் பெரியோா்களிடம் கேட்டு அறிந்த காலம் மாறி, இப்போது கணினி மூலம் அறியும் நிலைக்கு மாறிவிட்டோம் என்றாா்.

கல்லூரி முதல்வா் (பொறுப்பு) கி.வேணுகா, துணை முதல்வா் கோ.சுப்புலெட்சுமி, உதவிப் பேராசிரியா் பூ.பூங்கோதை உள்ளிட்டோா் பேசினா்.

பிற்பகல் அமா்வில் பேராசிரியா் அ.காமாட்சி, தமிழ் அநிதம் தலைவா் சுகந்தி நாடாா் உள்ளிட்டோா் கணினி தொழில்நுட்பம் பற்றி மாணவா்களுக்கு விளக்கினா்.

பயிலரங்கில் பங்கேற்ற மாணவா்களுக்கு, நான்காம் தமிழ்ச் சங்க செயலா் வழக்குரைஞா் ச.மாரியப்பமுரளி சான்றிதழ்கள் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT