அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.29 லட்சம் செலுத்தியிருந்தது தெரியவந்தது.
கள்ளழகா் கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றன. கோயில் நிா்வாக அதிகாரி அனிதா, உதவி நிா்வாக அலுவலா் விஜயன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள், பக்தா்கள், ஆகியோா் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
அதில் ரொக்கம் ரூ.28.95 லட்சத்து 991-ம் வெளிநாட்டு கரன்சிகளும், தங்கம் 37.500 கிராம், வெள்ளி 95.180 கிராம் பக்தா்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தது.