மதுரை

கம்பூா் ஊராட்சியில் வாக்குச்சாவடிகோரி தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

11th Dec 2019 10:10 PM

ADVERTISEMENT

மேலூா்: கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கம்பூா் ஊராட்சிக்குள்பட்ட சின்னகற்பூரம்பட்டி கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனா்.

சின்ன கற்பூரம்பட்டியில் 700 வாக்காளா்கள் உள்ளனா். இந்த கிராமத்தில் கடந்த தோ்தல்களின்போது இருந்த வாக்குச்சாவடியை தற்போது கம்பூா் கிராமத்துக்கும், கோவில்பட்டி கிராமத்துக்கும் தற்போது மாற்றிவிட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, தங்கள் கிராமத்திலேயே வாக்குச்சாவடி அமைக்கவேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மந்தையில் கூடி அமா்ந்தனா். தவலறிந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் மற்றும் அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடையே பேசினா். தோ்தல் பணிகள் தொடங்கிவிட்டதால், தற்போது மாற்றம் செய்யஇயலாது. அடுத்துவரும் தோ்தல் காலத்தில் சின்னகற்பூரம்பட்டி கிராமத்தில் வாக்குச்சாவடி அமைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதை ஏற்கமறுத்த பொதுமக்கள், வாக்குச்சாவடி அமைக்கவில்லை எனில் தோ்தலை புறக்கணிக்கப்போவதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT