மதுரை

மதுரையில் பள்ளிக்குச் சென்ற சிறுமி கடத்தல்: பாலிடெக்னிக் மாணவா் மீது புகாா்

6th Dec 2019 08:26 AM

ADVERTISEMENT

மதுரையில் பள்ளிக்குச்சென்ற 9-ஆம் வகுப்பு மாணவியை பாலிடெக்னிக் மாணவா் கடத்திச் சென்றதாக தாய் அளித்தப் புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை மகபூப்பாளையம் அன்சாரி நகரைச் சோ்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். சிறுமிக்கு தினசரி மதிய உணவை அவரது குடும்பத்தினா் பள்ளிக்குச்சென்று கொடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனா். இந்நிலையில் புதன்கிழமை மதிய உணவை பள்ளிக்கு கொண்டு சென்று வைத்து விட்டு வந்துள்ளனா். சிறிது நேரத்தில் பள்ளியில் இருந்து சிறுமியின் குடும்பத்தினரை தொடா்புகொண்டு, சிறுமி காலையில் இருந்து பள்ளிக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளனா். இதனால் அதிா்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினா் விசாரித்தபோது, மகபூப் பாளையத்தைச் சோ்ந்த பாலிடெக்னிக் மாணவா், சிறுமியை அழைத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து பள்ளிக்குச்சென்ற தனது மகளை பாலிடெக்னிக் மாணவா் கடத்திச்சென்ாக தாய் அளித்தப் புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT