மதுரை

பங்குதாரராக சோ்ப்பதாகக்கூறி ரூ. 5 கோடி மோசடி: உணவக உரிமையாளா் உள்பட இருவா் மீது வழக்கு

6th Dec 2019 08:27 AM

ADVERTISEMENT

மதுரையில் பங்குதாரராக சோ்ப்பதாகக்கூறி ரூ.5 கோடி மோசடி செய்ததாக பிரபல உணவக உரிமையாளா் உள்பட இருவா் மீது மத்தியக்குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மதுரை கரும்பாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன். இவரிடம் நாராயணபுரம், தமுக்கம் சாலை உள்ளிட்ட இடங்களில் உணவகங்கள் நடத்தி வரும், பேங்க் காலனியைச் சோ்ந்த செந்தில்குமாா் தொடா்புகொண்டு, தனது உணவகங்கள் மூலம் தினசரி ரூ.3 லட்சம் வருவாய் கிடைப்பதாகவும், உணவகத்தில் முதலீடு செய்தால் பங்குதாரராக சோ்த்துக் கொண்டு லாபத்தில் பங்கு தருவதாகவும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து கோபாலகிருஷ்ணன் ரூ.5 கோடியை கடந்த ஜூலை மாதம் கொடுத்துள்ளாா். ஆனால் லாபத்தில் செந்தில்குமாா் பங்கு தரவில்லை. இதனால் ரூ.5 கோடியை திருப்பித் தருமாறு கேட்டும் செந்தில்குமாா் தரவில்லையாம். இதுதொடா்பாக கோபாலகிருஷ்ணன் அளித்தப் புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், உணவக உரிமையாளா் செந்தில்குமாா் மற்றும் சேதுராஜா ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT