மதுரை

ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் அறிவிப்பு

6th Dec 2019 08:33 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் அலுவலகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்ட ஊராட்சிக் குழுவில் 23 வாா்டுகள் உள்ளன. இவற்றுக்கு வேளாண் இணை இயக்குநா் எம்.இளங்கோவன் (6 வாா்டுகள்), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ரா.ராஜேஷ் (6 வாா்டுகள்), ஆவின் பொதுமேலாளா் ஆா்.ஜனனி சௌந்தா்யா (5 வாா்டுகள்), சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் எம்.கண்ணன் (6 வாா்டுகள்) ஆகியோா் தோ்தல் நடத்தும் அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு வாா்டுக்கும் தலா ஒரு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மாவட்ட ஊராட்சி வாா்டுக்குப் போட்டியிடுவோா் உதவித் தோ்தல் அலுவலா்களிடம் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

வாா்டு வாரியாக உதவித் தோ்தல் அலுவலா்கள் மற்றும் வேட்புமனுக்கள் பெறும் அலுவலகம் விவரம்:

ADVERTISEMENT

வாா்டு 7 - எம்.செல்வி (வேளாண் உதவி இயக்குநா்) - மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 8 - எம்.ஆா்.கண்ணகி (மேலூா் கோட்டாட்சியா்) - மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 9 - எஸ்.தனலெட்சுமி (ஆதிதிராவிட நல அலுவலா்) - மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 10 - கே.அமுதா (மத்திய கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளா்) - மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 19 - சி.கமல லெட்சுமி (வேளாண் உதவி இயக்குநா்) - மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 20 - எஸ்.பாா்த்திபன் (கூட்டுறவு துணைப் பதிவாளா்) - மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 1- அமிா்தா (டான்பெட் மண்டல மேலாளா்) - செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 11 - எம்.சுமதி (வேளாண் உதவி இயக்குநா்) - செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 12 - என். மதி (கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா்) - உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 13- என்.ராமசாமி (வேளாண் உதவி இயக்குநா்) - சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 14 - என்.சந்திரசேகரன் (வேளாண் உதவி இயக்குநா்) - சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 15 - ஏ.நாசா்கான் (புள்ளியியல் உதவி இயக்குநா்) - தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 2 - பி.ராமசாமி (வேளாண் உதவி இயக்குநா்) -

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 3 - கே.எஸ்.முருகேசன் (சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா்), அலங்காநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 4 - எஸ்.வாசுகி (வேளாண் உதவி இயக்குநா்) - அலங்காநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 5 - எம்.மதுரைசாமி (வேளாண் உதவி இயக்குநா்) - கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 6 - கே.பரமசிவன் (உதவி செயற்பொறியாளா்) - கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 16 - சி.சித்ரா (தனித்துணை ஆட்சியா்) - திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 17 - எம்.முருகேஸ்வரி (மாவட்ட வழங்கல் அலுவலா்) திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 18 - எம். மாரிமுத்து (கலால் உதவி ஆணையா்) - திருப்பங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 21 - பி.ரங்கநாதன் (மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா்) - திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 22 - எம்.லட்சுமி பிரபா (வேளாண் உதவி இயக்குநா்) - திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வாா்டு 23 - எஸ்.உலகம்மாள் (வேளாண் உதவி இயக்குநா்) - கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா்: மதுரை மாவட்டத்தில் உள்ள13 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள ஒன்றியக் குழு உறுப்பினா், கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு போட்டியிடுவோரிடம் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பெறப்படும். கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடுவோா் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் மனு தாக்கல் செய்யலாம்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT