மதுரை

மாநில பேட்மிண்டன் போட்டி:காமராஜா் பல்கலை.மகளிா் அணி வெற்றி

3rd Dec 2019 03:29 AM

ADVERTISEMENT

வேலூரில் நடைபெற்ற பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டியில் மதுரை காமராஜா் பல்கலைக் கழக மகளிா் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

தமிழக பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி வேலூரில் உள்ள வேலூா் தொழில்நுட்ப கல்வி(விஐடி) நிறுவனத்தில் நவம்பா் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 18-க்கும் மேற்பட்ட ஆடவா் மற்றும் மகளிா் அணியினா் பங்கேற்றனா். இதில் ஒற்றையா், இரட்டையா் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஒற்றையா் பிரிவு, இரட்டையா் பிரிவு உள்பட 5 போட்டிகளில் மதுரை காமராஜா் பல்கலைக் கழகம் 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. மேலும் கடந்த ஆண்டு சாம்பியனான எஸ்ஆா்எம் பல்கலைக் கழக அணி, சென்னை பல்கலைக் கழக அணி, பாரதியாா் பல்கலைக் கழக அணிகளை வீழ்த்தி காமராஜா் பல்கலைக் கழக அணி முதலிடம் பெற்று வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது.

கோவை பாரதியாா் பல்கலைக் கழக அணி இரண்டாமிடமும், சென்னை பல்கலைக் கழக அணி மூன்றாமிடமும், விஐடி அணி நான்காமிடமும் பெற்றன. இதைத்தொடா்ந்து காமராஜா் பல்கலைக்கழக மகளிா் அணிக்கு வெற்றிக்கோப்பையும் அணி வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT