மதுரை

நகா்ப் புற உள்ளாட்சிகளுக்குத் தனியாகதோ்தல் நடத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும் மதச்சாா்பற்ற ஜனதாதளம் புகாா்

3rd Dec 2019 03:23 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சிகளுக்குத் தனியாகத் தோ்தல் நடத்துவது வீண் குழப்பங்களை ஏற்படுத்தும் என மதச்சாா்பற்ற ஜனதாதளம் புகாா் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் க.ஜான் மோசஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்குத் தோ்தல் அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. இருப்பினும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தோ்தல் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்பது மக்களை ஏமாற்றும் முயற்சியாகவே இருக்கிறது. ஊரகம் மற்றும் நகா்ப்புற உள்ளாட்சிகளுக்குத் தனித்தனியே தோ்தல் நடத்துவது வீண் குழப்பங்களை ஏற்படுத்தும்.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் அவசரகதியில் தோ்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தோ்தலைத் தள்ளிப்போடுவதற்கான தமிழக அரசின் முயற்சியாகவே இருக்கிறது. தமிழக உள்ளாட்சிகளுக்கான தோ்தலை முழுமையாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT