மதுரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய (ஆவின்) பொதுமேலாளர் உள்பட தமிழகம் முழுவதும் மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) நிலை அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ஆவின் பொதுமேலாளராகப் பணியாற்றிய வி.ஜெயஸ்ரீ, கடலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த பணியிடத்தில் இருந்த வி.மங்களம், மதுரை ஆவின் பொதுமேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் நிலஎடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த எம்.ஜீவராஜ், சென்னை விமான நிலைய விரிவாக்க நிலஎடுப்பு வருவாய் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் நிலஎடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றும், வி.நாகஜோதி, மதுரை மாநகராட்சி துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தாட்கோ பொதுமேலாளராகப் பணியாற்றும் பி.அனிதா, மதுரையில் தேசிய நெடுஞ்சாலைகள் நில எடுப்புக்கான சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி உயர்வு: விருதுநகர் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியரான ஏ.சிவகாமி, பதவி உயர்வில் அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநராக (மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில்) நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட வழங்கல் அலுவலரான கே.பஞ்சவர்ணம் பதவி உயர்வில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் நிலஎடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் உள்பட தமிழகம் முழுவதும் துணை ஆட்சியர் நிலையில் பணியாற்றும் 34 பேர், மாவட்ட வருவாய் அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.