மதுரை

லஞ்ச வழக்கு: தொழிலாளர் நல அலுவலக உதவி ஆணையர் சிபிஐ நீதிமன்றத்தில் சரண்

27th Aug 2019 10:28 AM

ADVERTISEMENT

லஞ்சம் பெற்ற வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி திருச்சி தொழிலாளர் நல அலுவலக உதவி ஆணையர் மதுரை சி.பி.ஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.
வேலூர் சத்துவாச்சேரியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 68). இவர் தொழிலாளர் நல அலுவலக உதவி ஆணையராக திருச்சி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் 2008 ஆம் ஆண்டு பணியாற்றிய போது லஞ்ச வழக்கில் கைதானார். இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று, பாண்டியனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 
இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பாண்டியன். ஆனால் சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உயர்நீதிமன்றமும் உறுதி செய்ததது. இதையடுத்து பாண்டியன் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 
அங்கும் தீர்ப்பை உறுதி செய்து, சிபிஐ 
நீதிமன்றத்தில் சரணடைய பாண்டியனுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து பாண்டியன் மதுரை சி.பி.ஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT