மதுரை

மதுரை வடக்கு தொகுதியில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்

27th Aug 2019 10:29 AM

ADVERTISEMENT

மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில்  முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது.  மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த சிறப்பு முகாமில் சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். வட்டாட்சியர்கள் செல்வராஜ், விஜயலெட்சுமி, சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ராஜன்செல்லப்பா பேசியது:  
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், நலத் திட்டங்கள் கிடைப்பதற்கு இந்த முகாமின் மூலமாக சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளது. 
 மதுரை வடக்கு பேரவைத் தொகுதியில் தற்போது 6,500 பேர் முதியோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். மேலும் பலர் முதியோர் ஓய்வூதியம் கோரி விண்ணப்பம் அளித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி உள்ள நபர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் மதுரை மாநகராட்சி பகுதியில் உயர்மட்ட பாலங்கள், சாலைகள் என பல்வேறு திட்டப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மாட்டுத்தாவணி  எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து ஆனையூர் வரை ரூ.65 கோடியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT