மதுரை

3 ஆண்டுக்கு முன்பு 2 குழந்தைகள் இறப்பு: மேலூர் அருகே தாய், கள்ளக்காதலன் கைது

23rd Aug 2019 09:50 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் மேலூர் அருகே எலி மருந்து கலந்த பிஸ்கெட் சாப்பிட்டதில் 2 குழந்தைகள் பலியான சம்பவத்தில், 3 ஆண்டுக்கு பின் தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
மேலூர் அருகேயுள்ள சருகுவலையபட்டியைச் சேர்ந்தவர் ராகவானந்தம். இவரது மனைவி ரஞ்சிதா (27). ராகவானந்தம் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருந்தனர். 
இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த  குழந்தைகள் 3 பேரும், எலி மருந்து கலந்த பிஸ்கட்டை சாப்பிட்டதாகக் கூறி மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் திரிபாலன் (8) என்ற சிறுவன் மட்டும் தொடர் சிகிச்சை காரணமாக  உயிர் பிழைத்தார். 
இந்நிலையில் ராகவானந்தம் வெளிநாட்டிலிருந்து சமீபத்தில் திரும்பினார். அவர் தனது குழந்தைகள் சாவில் மர்மம் உள்ளதாக மதுரை ஊரக மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். 
 அதில் நடவடிக்கை இல்லாததால், இதுதொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கீழவளவு போலீஸார் இவ்வழக்கை மீண்டும் விசாரித்தனர். அப்போது  தங்களுக்கு எலி மருந்து கலந்த பிஸ்கட்டை தாயார் ரஞ்சிதா, கொடுத்ததாக உயிர் பிழைத்த திரிபாலன் தெரிவித்துள்ளார்.
  மேலும் போலீஸாரின் தீவிர விசாரணையில், ரஞ்சிதாவுக்கும், அரிட்டாபட்டியைச் சேர்ந்த கல்யாணராமன் (30) என்பவருக்கும் தகாத உறவு இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ரஞ்சிதாவிடம் நடத்திய விசாரணையில், எலி மருந்து கலந்த பிஸ்கெட்டை குழந்தைகளுக்கு கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து ரஞ்சிதா, கல்யாணராமன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT