மதுரை

மேலூர் கால்வாயில் ஆண் குழந்தை மீட்பு

23rd Aug 2019 09:51 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் மேலூர் பெரியாறு கிளைக் கால்வாயில் பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தையை அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை மீட்டனர். 
மேலூர் பெரியாறு கிளைக்கால்வாய் விநாயகர் கோயில் அருகே ஆண் குழந்தையை யாரோ பையில் வைத்து விட்டுச் சென்றுள்ளனர். 
அவ்வழியாக வந்தவர்கள் குழந்தையை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த குழந்தைக்கு தொப்புள்கொடி கூட அகற்றப்படவில்லை. 
மேலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயந்தி மற்றும் மருத்துவர்கள் குழந்தைக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT