மதுரை

மாநில அளவிலான கவிதை, பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்

23rd Aug 2019 09:48 AM

ADVERTISEMENT

தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இப் போட்டிகளை மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் இல.கணேசன் தொடங்கி  வைத்தார்.
 இதில்  11, 12-ஆம் வகுப்பினருக்கான போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள் விவரம்:
கவிதைப்போட்டி: முதலிடம் - வி.சங்கீர்த்தனா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பால வித்யாலயா பள்ளி, படநிலம், குலசேகரம், கன்னியாகுமரி மாவட்டம். 2-ஆம் இடம் - இ.தேவதர்ஷிணி, பெஸ்ட் பதின்ம மேல்நிலைப் பள்ளி, நாகபட்டினம். 3-ஆம் இடம் - நா.ஓவியா, ஓ.சி.பி.எம். பள்ளி, மதுரை.
கட்டுரை: முதலிடம் - க.பவித்ரா, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சந்தைப்பேட்டை, புதுக்கோட்டை. 2-ஆம் இடம் - ர.ப்ரீத்தி, சர்மிளா காடஸ் மேல்நிலைப் பள்ளி, பொறையார், நாகபட்டினம். 3-ஆம் இடம் - மா.குமுதவள்ளி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
பேச்சுப்போட்டி: முதலிடம் - பு.ஹசினா, புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை. 2-ஆம் இடம் - ஜ. ஆசிமா, செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம். 3-ஆம் இடம் - மோ.பா.ஆதிரா, எல்.எம்.எஸ். மகளிர் மேல்நிலைப் பள்ளி, நெய்யூர், கன்னியாகுமரி.
 கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள் விவரம்:
கவிதைப்போட்டி: முதல் இடம் - ப.சகாதேவன், அரசுக் கலைக் கல்லூரி, கரூர். 2-ஆம் இடம் - மு.மோகனப்பிரியா, பெரியார் பல்கலை. உறுப்புக் கல்லூரி, எடப்பாடி, சேலம். 3-ஆம் இடம் - கு.தங்கமணி, கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி, திருப்பூர்.
கட்டுரைப் போட்டி: முதலிடம் - பி.வைஷ்ணா, தே.தி.இந்து கல்லூரி, நாகர்கோவில், 2-ஆம் இடம் - ர.சொரூபராணி, ஹாஜி கருத்தராவுத்தர் ஹெளதியா கல்லூரி, உத்தமபாளையம், 3-ஆம் இடம் - வி.அகிலா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.
பேச்சுப்போட்டி: முதலிடம் - த.செல்வராஜ், சென்னைப் பல்கலைக்கழகம், 2-ஆம் இடம் - த.தங்கமுத்து, அரசு கலைக் கல்லூரி, சேலம், 3-ஆம் இடம் - பு.சிந்து, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி, மதுரை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT