மதுரை

ஸ்ரீ மீனாட்சி மகளிர் கல்லூரியில்  பேரவைத் தொடக்கம்

16th Aug 2019 07:21 AM

ADVERTISEMENT

மதுரை ஸ்ரீ மீனாட்சி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற  பேரவைத் தொடக்க விழாவுக்கு  கல்லூரி முதல்வர் சூ.வானதி தலைமை வகித்தார்.  மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் பாஸ்கரன், கல்லூரி பேரவையைத் தொடங்கி வைத்து மகளிர் மேம்பாடு குறித்து சிறப்புரை ஆற்றினார். முன்னதாக இயற்பியல் துறைத்தலைவர் கா.சரோஜா வரவேற்றார். 
கல்லூரி பேரவைத் தலைவர் கு.கவிநிலா நன்றியுரை வழங்கினார். விழாவில் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியைகள்,  இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT