மதுரை

பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

16th Aug 2019 07:11 AM

ADVERTISEMENT

மதுரையில் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் புதன்கிழமை பறித்துச் சென்றார். 
மதுரை கே.புதூரைச் சேர்ந்த சங்கர் மனைவி ராஜேஸ்வரி (53). இவர் புதன்கிழமை வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ராஜேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், கே.புதூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT