மதுரை

போலி கடவுச்சீட்டில் துபை செல்ல முயன்றவர் கைது

11th Aug 2019 05:31 AM

ADVERTISEMENT


மதுரை விமான நிலையத்திலிருந்து போலி கடவுச்சீட்டு மூலம் துபைக்குச் செல்ல முயன்றவரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், இடையமேலூர் பகுதியைச் சேர்ந்த அழகர் மகன் மலைச்சாமி (42). இவர், வெள்ளிக்கிழமை தனியார் விமானம் மூலம் துபைக்குச் செல்ல, மதுரை விமான நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது, மலைச்சாமியின் கடவுச்சீட்டை விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 
அதில், மலைச்சாமி கடந்த 2003-ஆம் ஆண்டு  திருச்சியில் வேறு பெயரில், வேறு முகவரியில் கடவுச்சீட்டு பயன்படுத்தி வெளிநாடு சென்று வந்தது தெரியவந்தது.  அதையடுத்து, விமான நிலைய குடியேற்றப் பிரிவு போலீஸார் மலைச்சாமியை கைது செய்தனர்.
இது குறித்து, குடியேற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் விக்டர், பெருங்குடி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார்அளித்தார்.  அதன்பேரில், போலீஸார் மலைச்சாமி மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT