மதுரை

 உதவிப் பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு: மதுரை மாவட்டத்தில் 66 சதவீதம் பேர் பங்கேற்பு

11th Aug 2019 05:30 AM

ADVERTISEMENT

அரசுப் பணியாளர் தேர்வாணையம் சனிக்கிழமை நடத்திய உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில், மதுரை மாவட்டத்தில் 66 சதவீதம் பேர் பங்கேற்றனர். 
பொதுப்பணி, நெடுஞ்சாலை, வேளாண் பொறியியல், தொழிலகப் பாதுகாப்பு, மீன்வளம், துறைமுகம் உள்ளிட்ட துறைகளில் உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை, அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையும் மற்றும் பிற்பகல் 2.30 முதல் மாலை 4.30 வரையும் என இரு தேர்வுகள் நடத்தப்பட்டன.
இத்தேர்வுக்கென, மதுரை மாவட்டத்தில் 17 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத் தேர்வெழுத மொத்தம் 5,136 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், காலையில் நடந்த முதல் தாள் தேர்வில் 3,377  பேர் பங்கேற்றனர். 1,759 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு எழுதியவர்கள் சதவீதம் 65.75. அதேபோல், மாலையில் நடைபெற்ற 2-ஆம் தாள் தேர்வை 3,416 பேர் எழுதினர், 1,720 பேர் பங்கேற்கவில்லை. தேர்வு எழுதியவர்கள் 66.5 சதவீதம்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT