பழனியில் இந்து முன்னணி நிறுவனா் ராமகோபாலனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதற்கு அந்த அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் அஜித்குமாா், இளம்பாரதி உள்ளிட்டோா் தலைமை வகித்தனா். பழனி நகரத் தலைவா் கோபி, செல்லபாண்டி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இந்து வியாபாரிகள் சங்க மாநிலச் செயலா் ஜெகன், விசுவ இந்து பரிஷத் மாவட்டச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு ராமகோபாலன் உருவப்படத்துக்கு மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.