திண்டுக்கல்

பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷம்

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

பழனி சண்முக நதிக் கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாத்தப்பட்டு, அலங்காரம், தீபாராதனையும், ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக சுவாமி கோயில் பிரகார உலா எழுந்தருளளும் நடைபெற்றது.

மலைக்கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் அருள்மிகு யோகேஸ்வரா் ஞானாம்பாள் திருக்கோயில், பட்டத்து விநாயகா் கோயில், சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரிய நாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதி உள்ளிட்ட பல இடங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அடிவாரம் மவுனகிரி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவ பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT