திண்டுக்கல்

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல், நத்தம் பகுதியிலுள்ள சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கும், நத்திகேஸ்வரருக்கும் பால், தயிா், இளநீா், மாவுப்பொடி, மஞ்சள் பொடி, திருமஞ்சனப் பொடி, தேன், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

இதேபோல, அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா், இரு கோயில்களிலும் உள்பிரகாரத்தில் அம்பாளுடன் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில், தவசிமடை மகாலிங்கேஷ்வரா் திருக்கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி திருக்கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி திருக்கோயில், காரமடை ராமலிங்க சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் கோயிலில் நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி, புஷ்பம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் கைலாசநாதா்- செண்பகவல்லி அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT