வேடசந்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, சனிக்கிழமை (செப்.29) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது.
வேடசந்தூா் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் ஒட்டன்சத்திரம் உயா் அழுத்த மின் பாதையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணி காரணமாக சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெரும்பு, குருநாதநாயக்கனூா், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி, கேதையறும்பு ஆகிய இடங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சு.ஆனந்தகுமாா் தெரிவித்தாா்.