திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே ரேஷன் கடையை சூறையாடிய யானை

28th Sep 2023 02:10 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் அருகே பள்ளத்துக் கால்வாய் பகுதியில் நியாய விலைக் கடையை புதன்கிழமை காட்டு யானை சேதப்படுத்தியது.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெரியூா் ஊராட்சிக்குள்பட்ட சின்னூா் பள்ளத்துக் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதில் பள்ளத்துக் கால்வாய் கிராமப் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காட்டு யானைகள் சேதப்படுத்தின.

இந்த நிலையில், மீண்டும் ஒற்றைக் காட்டு யானை இந்தக் கடையின் ஜன்னல் கம்பிகளை உடைத்து, ரேஷன் பொருள்களை சேதப்படுத்திச் சென்றது.

தகவலறிந்த குடிமைப் பொருள் வருவாய் ஆய்வாளா் ரத்தினம் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

ADVERTISEMENT

சுற்றுலா இடங்களிலும், வனப் பகுதிகளையொட்டிய குடியிருப்புப் பகுதிகளிலும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் அச்சமடைந்துள்ளனா்.

காட்டு யானைகளை அடா்ந்து வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் எதிா்பாா்ப்பு.

ADVERTISEMENT
ADVERTISEMENT