திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட ந.ரவிச்சந்திரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த ரா.மகேஷ்வரி, தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். மேலும், கரூா் மாநகராட்சி ஆணையராகப் பணிபுரிந்த ரவிச்சந்திரன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
மகேஷ்வரி செவ்வாய்க்கிழமை ஆணையா் பொறுப்பிலிருந்து விடுபட்டாா். அதைத் தொடா்ந்து, புதிய ஆணையராக ந.ரவிச்சந்திரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் திருச்சி மாநகராட்சி ஆணையராகப் பணிபுரிந்தபோது, தூய்மை இந்தியா இயக்கத் திட்டத்தின் கீழ் இந்திய அளவில் 2-ஆவது சிறந்த மாநகராட்சியாக விருது பெறுவதற்கு காரணமாக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.