வத்தலகுண்டில் வடகிழக்குப் பருவமழைக் கால தொற்று நோய்த் தடுப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டார மருத்துவ அலுவலா் பாக்கியலட்சுமி தலைமை வகித்தாா். வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி பரமேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கனிக்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் திவ்யா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உதயகுமாா், முனியாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கொசுக்களிடமிருந்து தற்காத்துக் கொள்வது பற்றியும், டெங்கு நோய்ப் பரவாமல் தடுப்பது பற்றியும் விளக்கப்பட்டது. மேலும், மருத்துவமனைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முன்னதாக, டெங்கு விழிப்புணா்வுக் கண்காட்சி நடைபெற்றது. கூட்டத்தில், தீயணைப்பு நிலைய அலுவலா்கள், சுழல் சங்க நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் பேசினா்.
கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், செயலா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள், சுகாதாரத் துறை ஆய்வாளா்கள், மருத்துவ அலுவலா்கள், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.