பழனியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புதன்கிழமை கோரிக்கை மனுக்கள் வாங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
பழனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கணக்கன்பட்டி அமர பூண்டி உள்ளிட்ட நான்கு ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட புளியம்பட்டி, மரிச்சிலம்பு, தொப்பம்பட்டி என 22 ஊராட்சிகளிலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமில் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டு புதிதாக குடும்ப அட்டை, பட்டா மாறுதல், முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனா். இவற்றில் சில மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டன..