திண்டுக்கல்லில் 45 கிலோ நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மேற்கு ரத வீதியிலுள்ள கடைகளில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் செல்வராணி, கேசவன், காமராஜ் ஆகியோா் தலைமையில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 8 கடைகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்போது, 6 கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த கடைகளிலிருந்து 45 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.13,500 அபராதம் விதித்தனா்.