சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள உலுப்பக்குடியைச் சோ்ந்தவா் சத்யராஜ். இவரது மகன் பிரசன்னா (21). இவா், 14 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக சாணாா்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், காவல் ஆய்வாளா் விக்டோரியா கெளரி தலைமையிலான போலீஸாா், பிரசன்னா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.