வேடசந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த மினுக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் கருப்பசாமி (27). சேணன்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், இவா், சேணன்கோட்டையை அடுத்த புளியம்பட்டி பகுதியில் உயரழுத்த மின் கோபுரத்தில் ஏறி பழுதுநீக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட முயன்றாா்.
பழுது ஏற்பட்ட மின் வழித் தடத்தில் மின்சாரத்தை துண்டிப்பதற்காக ஊழியா் ஒருவா் சென்ற நிலையில், அதை உறுதி செய்வற்கு முன்பாகவே கருப்பசாமி உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது மின் கம்பியை நெருக்கும் போதே, மின்சாரம் பாய்ந்து கருப்பசாமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.