திண்டுக்கல்

கொடைக்கானலில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

25th Sep 2023 05:00 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாயுடுபுரத்திலிருந்து தொடங்கிய இந்த ஊா்வலம் டெப்போ பகுதி, ஏரிச்சாலை, செவண் சாலை, அண்ணா சாலை, மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை வழியாகச் சென்று அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள நீரோடையில் 100-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.

முன்னதாக கொடைக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், பெருமாள்மலை, வில்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, கோம்பை ஆகியப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் விநாயகா் சிலைகளை எடுத்து வந்திருந்தனா். 50-க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊா்வலத்துக்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி அமைப்பினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT