பழனி ரயிலடி சாலையில் அமமுக சாா்பில் 115-ஆவது அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், அந்தக் கட்சியின் கிழக்கு ஒன்றியச் செயலா் தினேஷ் குமாா் வரவேற்றாா். நகரச் செயலா் அறிவழகன், மேற்கு ஒன்றியச் செயலா் பொருந்தல் ரவி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். திண்டுக்கல் மண்டல பொறுப்பாளரும், மாவட்டச் செயலருமான நல்லசாமி, ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் டேவிட் அண்ணாதுரை ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
முன்னதாக பல்வேறு கட்சிகளில் இருந்து வந்த பலா் மாவட்டச் செயலா் நல்லசாமி முன்னிலையில் அமமுகவில் இணைந்தனா். கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளா் குமணன், ஒன்றிய இளைஞரணி செயலா் சிவா, இலக்கிய அணி ராஜூ, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மாலதி பெரியராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.